உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / மனு பாகர், ஆதர்ஷ் அபாரம்: துப்பாக்கி சுடுதல் தகுதி போட்டியில்

மனு பாகர், ஆதர்ஷ் அபாரம்: துப்பாக்கி சுடுதல் தகுதி போட்டியில்

போபால்: ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் தகுதி போட்டியில் இந்தியாவின் மனு பாகர், ஆதர்ஷ் சிங் முதலிடம் பிடித்தனர்.பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பங்கேற்க இந்திய நட்சத்திரங்களுக்கான 4வது சுற்று தகுதி போட்டி போபாலில் நடக்கிறது. பெண்களுக்கான 25 மீ., 'பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் மனு பாகர், ஈஷா சிங் முதலிரண்டு இடங்களை கைப்பற்றினர். மூன்றாவது இடத்தை ஈஷா சிங் பிடித்தார். அடுத்த இரு இடங்களை அபித்னியா பாட்டீல், சிம்ரன்பிரீத் கவுர் பிரார் தட்டிச் சென்றனர்.ஆண்களுக்கான 25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் முதல் மூன்று இடங்களை ஆதர்ஷ் சிங், அனிஷ் பன்வாலா, அன்குர் கோயல் கைப்பற்றினர். கடைசி இரு இடங்களை விஜய்வீர் சித்து, பாவேஷ் பிடித்தனர்.ஆண்கள், பெண்களுக்கான 25 மீ., பிஸ்டல் பிரிவு பைனல் இன்று நடக்கிறது. இதில் 'டாப்-2' இடம் பிடிப்பவர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறலாம். தற்போதுள்ள நிலையில் பெண்கள் பிரிவில் மனு பாகர், ஈஷா சிங், ஆண்கள் பிரிவில் அனிஷ் பன்வாலா, விஜய்வீர் சித்து ஆகியோருக்கு பாரிஸ் ஒலிம்பிக் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ