உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / மாஸ்டர்ஸ் செஸ்: குகேஷ் வெற்றி

மாஸ்டர்ஸ் செஸ்: குகேஷ் வெற்றி

விஜ்க் ஆன் ஜீ: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் 10வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார்.நெதர்லாந்தில், டாடா ஸ்டீல் செஸ் தொடரின் 88வது சீசன் நடக்கிறது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம், அர்ஜுன் எரிகைசி, நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் உள்ளிட்ட 14 பேர் விளையாடுகின்றனர்.பத்தாவது சுற்றில், இந்தியாவின் குகேஷ், துருக்கியின் யாகிஸ் கான் எர்டோக்மஸ் மோதினர். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய 'நடப்பு உலக சாம்பியன்' குகேஷ் 50வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் (வெள்ளை), 84வது நகர்த்தலில் செக்குடியரசின் தாய் டாய் வான் நுயெனை (கருப்பு) தோற்கடித்தார்.மற்றொரு 10வது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் (கருப்பு), 41வது நகர்த்தலில் ஜெர்மனியின் வின்சன்ட் கீமரிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் பிரக்ஞானந்தா (கருப்பு), அமெரிக்காவின் ஹான்ஸ் மோக் நீமன் (வெள்ளை) மோதிய போட்டி 40வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.பத்து சுற்றுகளின் முடிவில் உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் (6.5 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியாவின் குகேஷ், வின்சன்ட் கீமர் (ஜெர்மனி), விளாடிமிர் பெடோசீவ் (சுலோவேனியா) தலா 5 புள்ளிகளுடன் 7வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி