| ADDED : ஆக 09, 2024 10:29 PM
பாரிஸ்: ஒலிம்பிக் 'ஹெப்டத்லான்' போட்டியில் பிரிட்டனின் கேத்தரினா இரண்டாவது இடத்தில் உள்ளார்.பிரான்ஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 'ஹெப்டத்லான்' போட்டி நடக்கிறது. 100 மீ., தடை ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 200 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800 மீ., ஓட்டம் என மொத்தம் 7 போட்டி கொண்டது. ஒட்டுமொத்த போட்டிகள் முடிவில் அதிக புள்ளி பெறும் 'டாப்-3' வீராங்கனைகளுக்கு பதக்கம் கிடைக்கும்.முதல் 5 போட்டி முடிவில் உலக சாம்பியன் பிரிட்டனின் கேத்தரினா, முதலிடத்தில் இருந்தார். அடுத்து நடந்த ஈட்டி எறிதலில் இவர், 45.49 மீ., துாரம் மட்டும் எறிய 11 வது இடம் தான் கிடைத்தது. இதையடுத்து ஒட்டுமொத்தமாக 5803 புள்ளி எடுத்த கேத்தரினா, இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.பெல்ஜியத்தின் நவிசாட்டோவ் தியம், ஈட்டி எறிதலில் முதலிடம் (54.04 மீ.,) பெற்றார். இவர் மொத்தம் 5924 புள்ளி எடுத்து முதலிடத்துக்கு முன்னேறினர். மூன்றாவது இடத்தில் சுவிட்சர்லாந்தின் அன்னிக் (5694) உள்ளார்.இன்று கடைசி போட்டியாக 800 மீ., ஓட்டம் நடக்கிறது. இதில் சாதித்தால் கேத்தரினா, முதலிடம் பெற்று தங்கம் வெல்லலாம்.