உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / மயங்கிய தென் கொரிய வீராங்கனை

மயங்கிய தென் கொரிய வீராங்கனை

இம்சில்: பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிசுடுதலில் 10., ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் வெள்ளி வென்றார் தென் கொரிய வீராங்கனை கிம் ஏ ஜி 31. தனது 'ஸ்டைலான' போஸ் காரணமாக உலகம் முழுவதும் கவனம் ஈர்த்தார்.இவரை பாராட்டிய டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் கூறுகையில்,'' கிம் ஏ ஜி ஆக்சன் சினிமாவில் நடிக்கலாம்'' என தெரிவித்து இருந்தார்.இதனிடையே நாடு திரும்பிய கிம் ஏ ஜி பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். பின் நினைவு திரும்பியதும் மருத்துமனையில் சேர்க்கப்பட்டார்.ஒலிம்பிக் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டது, அதிகப்படியான மன அழுத்தம் காரணமாக இப்படி ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.கிம் ஏ ஜிக்கு சி.பி.ஆர்., சிகிச்சை தரவில்லை. தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை