மேலும் செய்திகள்
முதலிடம் பிடித்தார் விஷால்: இந்திய தடகள 400 மீ., ஓட்டத்தில்
22 hour(s) ago
ஆசிய ஹாக்கி: இந்தியா கோல் மழை
22 hour(s) ago
தங்கம் வென்றார் ஷீத்தல் தேவி * இந்தியாவுக்கு 13 பதக்கம்
09-Sep-2026 | 1
ஹாக்கி: இந்தியா கோல் மழை
09-Sep-2026
பிராகு: பிராகு செஸ் தொடரின் 8வது சுற்று போட்டியை பிரக்ஞானந்தா 'டிரா' செய்தார்.செக் குடியரசில் பிராகு சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் சந்தோஷ் குஜ்ராத்தி பங்கேற்கின்றனர். இதன் எட்டாவது சுற்றில் பிரக்ஞானந்தா, போலந்தின் பார்டெல் மோதினர். கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, போட்டியின் 34 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். மற்றொரு போட்டியில் குகேஷ், ஜெர்மனியின் வின்சென்ட் கீமெர் மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய குகேஷ், போட்டியின் 31வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். மற்றொரு இந்திய வீரர் விதித் சந்தோஷ், ருமேனியாவின் ரிச்சர்டு ராப்போர்ட் மோதிய போட்டி 'டிரா' ஆனது. இதுவரை முடிந்த எட்டு சுற்று முடிவில் உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் (6.0) முதலிடத்தில் உள்ளார். செக் குடியரசின் நிகுவேன் (4.5), ஈரானின் பர்ஹாம் (4.5), பிரக்ஞானந்தா (4.5) அடுத்த மூன்று இடத்தில் உள்ளனர். குகேஷ் (4.0) 7வது, விதித் குஜ்ராத்தி (2.5) 10வது இடங்களில் உள்ளனர்.
22 hour(s) ago
22 hour(s) ago
09-Sep-2026 | 1
09-Sep-2026