உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / புரோ கபடி: தமிழ் தலைவாஸ் ஏமாற்றம்

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் ஏமாற்றம்

நொய்டா: இந்தியாவில், புரோ கபடி லீக் 11வது சீசன் நடக்கிறது. உ.பி.,யின் நொய்டாவில் நடந்த லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், மும்பை அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் மும்பை அணி 23-12 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட தமிழ் தலைவாஸ் அணிக்கு 20 புள்ளி கிடைத்தன. மும்பை அணி 12 புள்ளி மட்டும் பெற்றது. ஆட்டநேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 32-35 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.தமிழ் தலைவாஸ் அணிக்கு மொயின் ஷபாகி (10 புள்ளி), நிதேஷ் குமார் (6) கைகொடுத்தனர். மும்பை அணி சார்பில் மஞ்ஜீத் 10, அஜித் சவுகான் 8 புள்ளி பெற்றனர். மற்றொரு லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ், உ.பி., அணிகள் மோதின. இதில் உ.பி., அணி 40-34 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !