உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / புரோ கபடி: ஐதராபாத் அபாரம்

புரோ கபடி: ஐதராபாத் அபாரம்

ஐதராபாத்: புரோ கபடி லீக் போட்டியில் ஐதராபாத் அணி, 37--29 என, பெங்களூருவை வென்றது.இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் 11 வது சீசன் நேற்று துவங்கியது. ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் பெங்களூரு புல்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் (ஐதராபாத்) அணிகள் மோதின. போட்டி துவங்கிய 2வது நிமிடத்தில் ஐதராபாத் 3-1 என முந்தியது. தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட ஐதராபாத் அணி முதல் பாதியில் 9 புள்ளி முன்னிலை (20-11) பெற்றது. இரண்டாவது பாதியில் பெங்களூரு அணி அடுத்தடுத்து புள்ளிகள் எடுத்தது. ஒரு கட்டத்தில் 23-24 என ஐதராபாத்தை நெருங்கியது. பின் பெங்களூரு ஆல் அவுட்டாக, ஐதாரபாத் 28-23 என முன்னேறியது. முடிவில் சொந்தமண்ணில் களமிறங்கிய ஐதராபாத் அணி 37-29 என்ற கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது. ஐதராபாத் அணி கேப்டன் பவன் ஷெராவத் அதிகபட்சம் 13 புள்ளி எடுத்தார். தவிர, புரோ கபடி அரங்கில் 1200 ரெய்டு புள்ளி என்ற மைல்கல்லை எட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ