மேலும் செய்திகள்
புரோ கபடி: பாட்னா வெற்றி
26-Oct-2025
புதுடில்லி: புரோ கபடி லீக் 'எலிமினேட்டர்' போட்டியில் தோற்ற பாட்னா அணி, தொடரில் இருந்து வெளியேறியது. இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. நேற்று, டில்லியில் நடந்த 'எலிமினேட்டர்-3' போட்டியில் பாட்னா பைரேட்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. போட்டி துவங்கிய 10 வது நிமிடத்தில் பாட்னா அணி 11-9 என முன்னிலை பெற்றது. பின் எழுச்சி பெற்ற தெலுங்கு டைட்டன்ஸ் அணி முதல் பாதியில் 22-20 என முன்னிலை பெற்றது.இரண்டாவது பாதியிலும் அசத்திய தெலுங்கு டைட்டன்ஸ் அணி 46-39 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இன்று நடக்கும் தகுதிச்சுற்று 2ல் புனே அணியுடன் மோதுகிறது. இதில் வெல்லும் அணி பைனலில் (அக்., 31ல்) டில்லியுடன் பலப்பரீட்சை நடத்தலாம்.
26-Oct-2025