உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / தமிழ் தலைவாஸ் அபாரம்

தமிழ் தலைவாஸ் அபாரம்

ஐதராபாத்: இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் 11 வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் மோதுகின்றன. ஐதராபாத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், புனே அணிகள் மோதின. முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 23-18 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் சிறப்பாக செயல்பட்ட தமிழ் தலைவாஸ் அணி, 35-30 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணியின் நரேந்தர் 9, சச்சின் 8 புள்ளி எடுத்து அசத்தினர். பங்கேற்ற 2 போட்டியிலும் வென்ற தமிழ் தலைவாஸ் அணி, 10 புள்ளியுடன் பட்டியலில் 4வதாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !