உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ரவிந்தர் சிங் தங்கம்: உலக துப்பாக்கி சுடுதலில்

ரவிந்தர் சிங் தங்கம்: உலக துப்பாக்கி சுடுதலில்

கெய்ரோ: உலக துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ரவிந்தர் சிங் (50 மீ., 'பிஸ்டல்') தங்கம் வென்றார்.எகிப்தில், உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 50 மீ., 'பிஸ்டல்' தனிநபர் பிரிவில் இந்தியாவின் ரவிந்திர் சிங், 569.12 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மற்ற இந்திய வீரர்களான கமல்ஜீத் (540.9 புள்ளி), யோகேஷ் குமார் (537.5) முறையே 20, 24வது இடத்தை கைப்பற்றினர்.ஆண்கள் அணிகளுக்கான 50 மீ., 'பிஸ்டல்' பிரிவில் ரவிந்தர், கமல்ஜீத், யோகேஷ் அடங்கிய இந்திய அணி 1646.26 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றது. தென் கொரிய அணி தங்கத்தை கைப்பற்றியது. உக்ரைனுக்கு வெண்கலம் கிடைத்தது.பெண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' தனிநபர் பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் இளவேனில் (633.4 புள்ளி) 5வது இடம் பிடித்தார். அடுத்து நடந்த பைனலில் 232.0 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்த இளவேனில் வெண்கலம் வென்றார்.பெண்கள் அணிகளுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவில் இளவேனில், மேகனா, ஷ்ரேயா அடங்கிய இந்திய அணி (1893.3 புள்ளி) வெண்கலம் கைப்பற்றியது.இத்தொடரில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என, 4 பதக்கம் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை