மேலும் செய்திகள்
தமிழ் தலைவாஸ் அணி தோல்வி: புரோ கபடி லீக் போட்டியில்
10 hour(s) ago
உலக விளையாட்டு செய்திகள்
10 hour(s) ago
உலக விளையாட்டு செய்திகள்
03-Oct-2025
வெள்ளி வென்றார் தரம்பிர்: உலக பாரா தடகளத்தில்
02-Oct-2025
கொபே: உலக 'பாரா' தடகளத்தின் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் ரிங்கு வெண்கலம் வென்றார்.ஜப்பானில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக 'பாரா' தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் 'எப்46' பிரிவு பைனலில் இந்தியாவின் ரிங்கு (62.77 மீ.,) வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்கிய இந்தியாவின் அஜீத் சிங் (62.11 மீ.,) நான்காவது இடம் பிடித்தார். ஆசிய பாரா விளையாட்டில் (2022) தங்கம் வென்ற இந்தியாவின் சுந்தர் சிங் குர்ஜார் (59.03 மீ.,) 8வது இடம் பிடித்து ஏமாற்றினார்.முதலிடம் பிடித்த கியூபாவின் வரோனா கான்சலசிற்கு (65.16 மீ.,) எதிராக 2வது இடம் பிடித்த இலங்கையின் பிரியந்தா ஹெராத் (64.59 மீ.,) எதிர்ப்பு தெரிவித்ததால், இப்போட்டிக்கான முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் ரிங்குவின் பதக்கத்திற்கு எவ்வித சிக்கலும் இல்லை.பெண்களுக்கான 200 மீ., 'டி12' பிரிவு ஓட்டத்தின் தகுதிச் சுற்றில் இந்தியாவின் சிம்ரன் (25.26 வினாடி) முதலிடம் பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார்.இதுவரை 5 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என 13 பதக்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
10 hour(s) ago
10 hour(s) ago
03-Oct-2025
02-Oct-2025