பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் முதல் சுற்றில் இந்தியாவின் சரத் கமல் தோல்வியடைந்தார்.பிரான்சில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதன் டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அஜந்தா சரத் கமல் 42, சுலோவேனியாவின் டெனி கோசுல் மோதினர். ஐந்தாவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற சரத் கமல் 2-4 (12-10, 9-11, 6-11, 7-11, 11-8, 10-12) என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்து வெளியேறினார்.பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, சுவீடனின் கிறிஸ்டினா கால்பெர்க் மோதினர். அபாரமாக ஆடிய ஸ்ரீஜா 4-0 (11-4, 11-9, 11-7, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் மணிகா பத்ரா, பிரிட்டனின் அனா ஹர்சி மோதினர். இதில் மணிகா 4-1 (11-8, 12-10, 11-9, 9-11, 11-5) என வெற்றி பெற்றார்.சிந்து வெற்றி: பாட்மின்டன் பெண்கள் ஒற்றையர் 'எம்' பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் சிந்து, மாலத்தீவின் பாத்திமத் அப்துல் ரசாக் மோதினர். முதல் செட்டை 21-9 எனக் கைப்பற்றிய சிந்து, இரண்டாவது செட்டை 21-6 என வென்றார். இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்து 21-9, 21-6 என்ற நேர் செட் கணக்கில் மிகச் சுலபமாக வெற்றி பெற்றார்.நிகாத் ஜரீன் அபாரம்:பெண்களுக்கான குத்துச்சண்டை 50 கிலோ பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் நிகாத் ஜரீன், ஜெர்மனியின் மேக்ஸி கரினா குளோட்சர் மோதினர். இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற நிகாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.பெண்களுக்கான 54 கிலோ பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரீத்தி பவார், வியட்நாமின் வோ தி கிம் ஆன்ஹ் மோதினர். ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற பிரீத்தி 5-0 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார்.டென்னிஸ்: சுமித் நாகல் ஏமாற்றம்டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், பிரான்சின் கோரென்டின் மவுடெட் மோதினர். முதல் செட்டை 6-2 என இழந்த சுமித் நாகல், பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 6-2 எனக் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் ஏமாற்றிய இவர் 5-7 என போராடி கோட்டைவிட்டார். முடிவில் சுமித் நாகல் 2-6, 6-2, 5-7 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.நீச்சலில் பின்னடைவுஆண்களுக்கான நீச்சல், 100 மீ., 'பேக்ஸ்டிரோக்' தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ், இலக்கை 55.01 வினாடியில் கடந்து 33வது இடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.பெண்களுக்கான நீச்சல் 200 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் தினிதி தேசிங்கு, பந்தய துாரத்தை 2 நிமிடம், 06.96 வினாடியில் அடைந்து 23வது இடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெறத்தவறினார். இதன்மூலம் நீச்சல் போட்டியில் இந்தியாவின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது.காலிறுதியில் பால்ராஜ்ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு படகு வலித்தல் ('ஸ்கல்ஸ்') 'ரெப்பிசேஜ்' போட்டியில் இந்தியாவின் பால்ராஜ் பன்வார் பங்கேற்றார். இலக்கை 7 நிமிடம், 12.41 வினாடியில் கடந்து 2வது இடம் பிடித்த பால்ராஜ் காலிறுதிக்கு முன்னேறினார்.ஹாக்கி: இந்தியா-அர்ஜென்டினா மோதல்ஆண்களுக்கான ஹாக்கி 'பி' பிரிவு லீக் போட்டியில் இன்று இந்தியா, அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன. நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 'திரில்' வெற்றி பெற்ற இந்தியா, மீண்டும் அசத்தினால் தொடர்ச்சியாக 2வது வெற்றியை பெறலாம்.ஹாக்கி: ஆஸி., அபாரம்பெண்களுக்கான ஹாக்கி 'பி' பிரிவு லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு 'பி' பிரிவு லீக் போட்டியில் பிரிட்டன் அணி 1-2 என ஸ்பெயினிடம் தோல்வியடைந்தது. 'ஏ' பிரிவு லீக் போட்டியில் பெல்ஜியம் (2-1, எதிர்: சீனா), ஜெர்மனி (2-0, எதிர்: ஜப்பான்) அணிகள் வெற்றி பெற்றன.நடால்-அல்காரஸ் அசத்தல்டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் ஸ்பெயினின் ரபெல் நடால், கார்லஸ் அல்காரஸ் ஜோடி 7-6, 6-4 என அர்ஜென்டினாவின் மேக்சிமோ கான்சலேஸ், ஆன்ட்ரெஸ் மோல்டெனி ஜோடியை வீழ்த்தியது.பிரனாய் வெற்றிபாட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் 'கே' பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் பிரனாய், ஜெர்மனியின் பேபியன் ரோத் மோதினர். அபாரமாக ஆடிய பிரனாய் 21-18, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது.