உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / சாத்விக் - சிராக் அபாரம்: டென்மார்க் ஓபன் பாட்மின்டனில்

சாத்விக் - சிராக் அபாரம்: டென்மார்க் ஓபன் பாட்மின்டனில்

ஓடென்ஸ்: டென்மார்க் ஓபன் பாட்மின்டன் அரையிறுதிக்கு இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி முன்னேறியது.டென்மார்க்கில், 'சூப்பர் 750' அந்தஸ்து பெற்ற சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது.ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஜோடி, இந்தோனேஷியாவின் முகமது ரியான் அர்டியான்டோ, ரஹ்மத் ஹிதாயத் ஜோடியை எதிர்கொண்டது.முதல் செட்டை 21-15 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, 2வது செட்டை 18-21 என இழந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் எழுச்சி கண்ட இந்திய ஜோடி 21-16 என தன்வசப்படுத்தியது. முடிவில் இந்திய ஜோடி 21-15, 18-21, 21-16 என வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் லக்சயா சென் 9-21, 14-21 என பிரான்சின் அலெக்ஸ் லேனியரிடம் தோல்வியடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை