| ADDED : ஜூன் 07, 2024 11:03 PM
முனிக்: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் வெண்கலம் வென்றார்.ஜெர்மனியில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ('ரைபிள்' / 'பிஸ்டல்') நடந்தது. பெண்களுக்கான 50 மீ., 'ரைபிள்-3 பொஷிசன்ஸ்' பிரிவு பைனலில் இந்தியாவின் சிப்ட் கவுர் சாம்ரா, 452.9 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார். சீனாவின் ஹான் ஜியாயு (462.6 புள்ளி) வெள்ளி வென்றார். பிரிட்டனின் செனாய்டு மெக்கின்டோஷ் (466.7) தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.இத்தொடரில் ஒரு தங்கம், ஒரு வெண்கலம் என 2 பதக்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 3வது இடத்தை பிரான்சுடன் பகிர்ந்து கொண்டது. முதலிரண்டு இடங்களை சீனா (4 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம்), வடகொரியா (ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்) பிடித்தன. ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் இந்தியாவின் சரப்ஜோத் சிங் தங்கம் வென்றார்.