உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஸ்குவாஷ்: அரையிறுதியில் வேலவன்

ஸ்குவாஷ்: அரையிறுதியில் வேலவன்

புடாபெஸ்ட்: புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் அரையிறுதிக்கு இந்தியாவின் வேலவன், வீர் சோட்ரானி முன்னேறினர்.ஹங்கேரியில், புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில், உலக தரவரிசையில் 54வது இடத்தில் உள்ள இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், 'நம்பர்-18' மலேசியாவின் ஈன் யோவ் மோதினர். இதில் வேலவன் 3-0 (11-2, 11-9, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் வீர் சோட்ரானி, எகிப்தின் முகமது எல்ஷெர்பினி மோதினர். இதில் வீர் சோட்ரானி 3-1 (14-12, 12-14, 11-6, 11-8) என வெற்றி பெற்றார். அரையிறுதியில் வீர் சோட்ரானி, வேலவன் மோதுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை