உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஸ்குவாஷ்: வேலவன் வெற்றி

ஸ்குவாஷ்: வேலவன் வெற்றி

தோகா: கத்தார் சர்வதேச ஸ்குவாஷ் முதல் சுற்றில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், அபய் சிங் வெற்றி பெற்றனர்.கத்தார் தலைநகர் தோகாவில் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் முதல் சுற்றில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், கத்தாரின் யூசப் எஸ்சாம் பராக் மோதினர். மொத்தம் 32 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய தமிழகத்தின் வேலன் 3-0 (11-7, 11-4, 11-4) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றில் வேலவன், எகிப்தில் உமர் மொசாத் மோதுகின்றனர்.மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் அபய் சிங், பாகிஸ்தானின் முகமது ஆசிம் கான் மோதினர். மொத்தம் 38 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய அபய் சிங் 3-0 (11-2, 11-9, 15-13) என வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றில் அபய் சிங், பிரான்சின் அகஸ்டே டுசூர்ட் மோதுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ