உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஸ்குவாஷ்: காலிறுதியில் வேலவன்

ஸ்குவாஷ்: காலிறுதியில் வேலவன்

பாரிஸ்: 'பேட்ச்' ஓபன் ஸ்குவாஷ் காலிறுதிக்கு இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் முன்னேறினார்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆண்களுக்கான 'பேட்ச்' ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், பிரான்சின் மேட்டியோ கேரோஜெட் மோதினர். இதில் வேலவன் 3-0 (11-4, 11-6, 11-7) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். காலிறுதியில் வேலவன், செக்குடியரசின் ஜக்குப் சோல்னிக்கி மோதுகின்றனர்.

அகங்ஷா அபாரம்

அமெரிக்காவில் பெண்களுக்கான செயின்ட் ஜேம்ஸ் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் 2வது சுற்றில் இந்தியாவின் அகங்ஷா சாலுங்கே, கவுதமாலாவின் வினிபர் போனிலா மோதினர். மொத்தம் 25 நிமிடம் நீடித்த போட்டியில் அகங்ஷா 3-0 (11-8, 11-2, 11-9) என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இதில் அகங்ஷா, உக்ரைனின் அலினா புஷ்மாவை எதிர்கொள்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ