ஸ்டார்க், ஹெட் விடுவிப்பு
புதுடில்லி: பிரிமியர் லீக் அணிகளில் இருந்து ஸ்டார்க், ஹெட் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். கிரிக்கெட் லீக் 20வது சீசனுக்கான (2027) வீரர்கள் ‘மினி’ ஏலம், வரும் டிச. 16ல் கோவாவில் நடக்கவுள்ளது. இதற்கு முன்னதாக, ஒவ்வொரு அணிகளும், மற்ற அணிகளில் இருந்து, ‘டிரேடிங்’ முறையில் வீரர்களை மாற்றிக்கொண்டன. இதன்படி, கலீல் அகமது, நாதன் எல்லீசிற்குப் பதில் ஐதராபாத் அணியிடம் இருந்து, லிவிங்ஸ்டன், ஜாக் எட்வர்ட்சை சென்னை அணி வாங்கியது. தற்போது, இறுதியாக, தக்கவைக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் நேற்று வெளியானது. டில்லி அணியில் ரூ. 11.75 கோடிக்கு வாங்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க், அபிஷேக் போரல், டக்கெட், கருண் நாயர் உட்பட 10 வீரர்கள் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஐதராபாத் அணியில் இருந்து டிராவிஸ் ஹெட் (ரூ. 14 கோடி), கோயட்சீ விடுவிக்கப்பட்டனர். தவிர, பவுல்ட் (மும்பை), பெத்தெல் (பெங்களூரு), ஹெட்மயர் (ராஜஸ்தான்) உட்பட பல முன்னணி வீரர்கள் கழற்றி விடப்பட்டனர். கொல்கட்டா அணி கேமரான் கிரீனை (ரூ. 25.20 கோடி) தக்கவைத்தது. தவிர 12 வீரர்களை வெளியேற்றியது. தோனி ஓய்வு பெற்ற நிலையில், பிரசாந்த் வீர், மாட் ஹென்றி விடுவிக்கப்பட்டனர். இதனால் வரும் ஏலத்தில் ரூ. 28.05 கோடி கையிருப்புடன், சென்னை அணி பங்கேற்க உள்ளது. அதிகபட்சம் லக்னோ அணி ரூ. 41.65 கோடி வைத்துள்ளது.