மேலும் செய்திகள்
டேபிள் டென்னிஸ்: சரத் கமல் வெற்றி
28-Mar-2025
டுனிஸ்: டுனிஸ் டேபிள் டென்னிஸ் தகுதிச்சுற்றில் இந்தியாவின் தியா சிட்டாலே வெற்றி பெற்றார்.உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடர் டுனிசியாவில் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்று நேற்று நடந்தன. இதன் முதல் போட்டியில் இந்தியாவின் தியா சிட்டாலே, ருமேனியாவின் எலினா ஜஹாரியாவை சந்தித்தார். முதல் செட்டை 6-11 என இழந்த தியா, அடுத்த செட்டை 11-9 என கைப்பற்றினார். மூன்றாவது செட்டை 5-11 என நழுவவிட்ட போதும், 4வது செட்டை 11-2 என எளிதாக வசப்படுத்தினார். வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த கடைசி செட்டை 12-10 என போராடி வென்றார். முடிவில் தியா 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் தனீஷா, 0-3 என (9-11, 7-11, 8-11) பிரான்சின் லியனாவிடம் தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் சுதிர்த்தா முகர்ஜீ, 2-3 என (11-8, 3-11, 12-10, 10-12, 9-11) துருக்கியின் ஈஸ் ஹராக்கிடம் வீழ்ந்தார்.
28-Mar-2025