மேலும் செய்திகள்
ஐ.எஸ்.எல்., கால்பந்து: சென்னை அணி அசத்தல்
11-Dec-2024
ரூர்கேலா: ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் அசத்திய உ.பி., ருத்ராஸ் அணி 3-0 என சூர்மா கிளப் அணியை வீழ்த்தியது.ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில், ஹாக்கி இந்தியா லீக் 6வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் உ.பி., ருத்ராஸ், சூர்மா ஹாக்கி கிளப் (பஞ்சாப், ஹரியானா) அணிகள் மோதின. ஆட்டத்தின் 2வது நிமிடத்தில் உ.பி., அணியின் சுதீப் சிர்மாகோ ஒரு கோல் அடித்தார். இதற்கு சூர்மா அணியினரால் பதிலடி தர முடியவில்லை. முதல் பாதி முடிவில் உ.பி., அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.இரண்டாவது பாதியிலும் அசத்திய உ.பி., அணிக்கு ஜோபன்பிரீத் சிங் (38வது நிமிடம்), ஆகாஷ்தீப் சிங் (58வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். கடைசி நிமிடம் வரை போராடிய சூர்மா கிளப் அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் உ.பி., அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.முதல் போட்டியில் கலிங்கா லான்சர்ஸ் அணியை வீழ்த்திய உ.பி., ருத்ராஸ் அணி, 6 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. சூர்மா கிளப் அணி ஒரு 'டிரா', ஒரு தோல்வி என 2 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
11-Dec-2024