உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / செஸ் உலக சாம்பியன்ஷிப் நடத்த ரூ.80 கோடி

செஸ் உலக சாம்பியன்ஷிப் நடத்த ரூ.80 கோடி

புதுடில்லி: செஸ் உலக சாம்பியன்ஷிப் நடந்த ரூ. 80 கோடி தேவைப்படுகிறது. சர்வதேச செஸ் கூட்டமைப்பு (பிடே) சார்பில் உலக சாம்பியன்ஷிப் போட்டி வரும் நவ. 20 முதல் டிச. 15 வரை நடத்தப்பட வாய்ப்புள்ளது. இதில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனுடன் 31, (சீனா), கேண்டிடேட்ஸ் தொடரில் சாதித்த இளம் வீரர் குகேஷ் 17, மோத காத்திருக்கிறார். இதற்கான இடம் இன்னும் முடிவாகவில்லை.இருப்பினும் உலக சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியாவில் நடத்த அகில இந்திய செஸ் கூட்டமைப்பு முயற்சி செய்து வருகிறது. இதனிடையே, மொத்தம் 25 நாள் நடக்கவுள்ள இப்போட்டிக்கு பட்ஜெட் ரூ. 71 கோடி, தவிர 'பிடே' அமைப்புக்கு ரூ.9 கோடி கட்டணம் என மொத்தம் ரூ. 80 கோடி வரை தேவைப்படுவதாக 'பிடே' தெரிவித்துள்ளது. இதற்கான ஏலத்தில் பங்கேற்க, மே 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஜூலை 1ல் போட்டி நடக்கும் இடம் அறிவிக்கப்படும். பரிசு ரூ. 21 கோடிஉலக சாம்பியன்ஷிப் மொத்த பரிசுத் தொகை ரூ. 17 கோடியில் (2023) இருந்து ரூ. 21 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி