| ADDED : ஏப் 15, 2024 10:15 PM
ரமோனா: வட்டு எறிதலில் லிதுவேனிய வீரர் மைகோலஸ் அலெக்னா உலக சாதனை படைத்தார்.அமெரிக்காவின் ஓக்லஹோமா நகரில் வட்டு எறிதல் போட்டி நடந்தது. லிதுவேனியாவின் மைகோலஸ் அலெக்னா அதிகபட்சமாக 74.34 மீ., எறிந்து, உலக சாதனை படைத்தார். இதற்கு முன் 1986, ஜூன் 6ல் ஜெர்மனியின் நியூபிரண்டன்பர்க் நகரில் நடந்த போட்டியில் ஜெர்மனியின் ஜர்கன் ஷுல்ட் 74.08 மீ., எறிந்தது உலக சாதனையாக இருந்தது.கலிபோர்னியா பல்கலை.,யில் படித்து வரும் மைகோலஸ் அலெக்னா 21, வெளியரங்கு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு பதக்கம் (2022ல் வெள்ளி, 2023ல் வெண்கலம்) வென்றிருந்தார். இவரது தந்தை விர்ஜிலிஜஸ் அலெக்னா வட்டு எறிதலில் அதிக துாரம் எறிந்த வீரர்கள் வரிசையில் 3வது இடத்தில் உள்ளார். இவர், 2000ல் லிதுவேனியாவில் நடந்த போட்டியில் 73.88 மீ., துாரம் எறிந்திருந்தார்.