உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

ஜப்பான் வீரர் சாம்பியன்குமாமோட்டோ: ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ஜப்பானின் கொடாய் நரோகா 21-11, 10-21, 21-15 என சகவீரர் கென்டா நிஷிமோட்டோவை வீழ்த்தி சாம்பியன். பெண்கள் ஒற்றையர் பைனலில் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனான் 21-16, 22-20 என இந்தோனேஷியாவின் கிரிகோரியா மரிஸ்கா துங்ஜங்கை வீழ்த்தி சாம்பியன் ஆனார்.ஸ்பெயின் கலக்கல்டிபிலிசி: ஜார்ஜியாவில் நடந்த 'பிபா' உலக கோப்பை கால்பந்து ஐரோப்பிய அணிகளுக்கான தகுதிச் சுற்றில் ஸ்பெயின், ஜார்ஜியா அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த ஸ்பெயின் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்த ஸ்பெயின், பிரதான சுற்றுக்கான வாய்ப்பை நெருங்கியது.இங்கிலாந்து முன்னேற்றம்அல் ரய்யான்: கத்தாரில், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து 20வது சீசன் நடக்கிறது. இதன் 'ரவுண்டு-32' போட்டியில் தென் கொரியா, இங்கிலாந்து அணிகள் மோதின. அபாரமாக ஆடிய இங்கிலாந்து 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.பைனலில் கென்யாநைரோபி: கென்யாவில், ஆப்ரிக்க பெண்களுக்கான ரக்பி செவன்ஸ் 13வது சீசன் நடக்கிறது. இதன் அரையிறுதியில் கென்யா, உகாண்டா அணிகள் மோதின. இதில் கென்ய அணி 17-10 என வெற்றி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் தென் ஆப்ரிக்க அணி 29-0 என, மடகாஸ்கர் அணியை வீழ்த்தியது.எக்ஸ்டிராஸ்* பெங்களூருவில் நடந்த பெண்களுக்கான பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் 'பிளே-ஆப்' போட்டியில் இந்திய அணி 0-2 என நெதர்லாந்திடம் வீழ்ந்தது. ஏற்கனவே சுலோவேனியாவிடம் தோற்ற இந்தியா, பைனலுக்கான தகுதிச் சுற்றுக்கு முன்னேற தவறியது.* தேனி, டி.என்.சி.ஏ., அகாடமி மைதானத்தில் நடக்கும் கூச் பெஹர் டிராபி (19 வயது) லீக் போட்டியில் தமிழகம், மத்திய பிரதேசம் அணிகள் விளையாடுகின்றன. குஷ் பர்தியா (148) கைகொடுக்க முதல் நாள் முடிவில் தமிழக அணி 272/5 ரன் எடுத்திருந்தது.* எகிப்தில் நடக்கும் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 25 மீ., 'சென்டர் பயஸ் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஹர்பிரீத் சிங் (291.10 புள்ளி) 2வது இடம் பிடித்தார்.* ஓமனில் நடக்கும் உலக கோப்பை ஸ்னுாக்கர் லீக் போட்டியில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி 3-0 என, பஹ்ரைனின் ஹேஷாம் அல்சாகரை வீழ்த்தினார். தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்த அத்வானி, 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை