மேலும் செய்திகள்
கரைபுரளுது லஞ்ச 'ஆறு' கடிவாளம் போடுறது யாரு?
21-Oct-2025
பெடரருக்கு கவுரவம்நியூயார்க்: சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் 44. கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 20 கோப்பை வென்ற முதல் வீரரான இவர், ஏ.டி.பி., ஒற்றையரில் 103 பட்டம் கைப்பற்றினார். கடந்த 2022ல் ஓய்வை அறிவித்த பெடரர், அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள சர்வதேச டென்னிஸ் 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் சேர்க்கப்பட உள்ளார்.காலிறுதியில் பிரேசில்அல் ரய்யான்: கத்தாரில் நடக்கும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து 'ரவுண்டு-16' போட்டியில் பிரான்ஸ், பிரேசில் அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது. பின் 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் அசத்திய பிரேசில் 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.அர்ஜென்டினா அசத்தல்அசன்சியன்: பராகுவேயில், தெற்கு, மத்திய அமெரிக்க பெண்களுக்கான 'யூத்' ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் அர்ஜென்டினா அணி 37-18 என்ற கணக்கில் வெனிசுலாவை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் பிரேசில் அணி 50-11 என, கோஸ்டாரிகாவை தோற்கடித்தது.அரையிறுதியில் பெல்ஜியம்போலோக்னா: இத்தாலியில் நடக்கும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் காலிறுதியில் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் மோதின. இதில் பெல்ஜியம் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் இத்தாலி அல்லது ஆஸ்திரியாவுடன் மோதும்.எக்ஸ்டிராஸ்* வங்கதேசத்தின் மிர்புரில் பெண்களுக்கான கபடி உலக கோப்பை தொடர் நடக்கிறது. நடப்பு சாம்பியன் இந்தியா, முதல் போட்டியில் தாய்லாந்தை வென்றது. நேற்று இரண்டாவது போட்டியில் இந்தியா, 43-19 என வங்கதேசத்தை வீழ்த்தியது. * ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். கிளென் டர்னருக்கு (1979) பின் இப்பட்டியலில் முதலிடம் பிடித்த 2வது நியூசிலாந்து பேட்டரானார் மிட்செல்.* பெங்களூருவில் நடக்கும் முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான (19 வயது) லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி (168/10, 45.2 ஓவர்) 71 ரன் வித்தியாசத்தில் இந்தியா 'பி' அணியை (97/10, 29.3 ஓவர்) வீழ்த்தியது.* ஜிம்பாப்வே, நமீபியாவில் நடக்கவுள்ள (2026, ஜன. 15 - பிப். 6) 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை (50 ஓவர்) தொடரில் இந்திய அணி, 'ஏ' பிரிவில் அமெரிக்கா (ஜன. 15), வங்கதேசம் (ஜன. 17), நியூசிலாந்து (ஜன. 24) அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.* ஐதராபாத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் ஹிமான்ஷு நந்தல் (எஸ் 11 பிரிவு) 'ஹாட்ரிக்' தங்கம் (50 மீ., 'பிரீஸ்டைல்', 100 மீ., 'பிரெஸ்ட்ஸ்டிரோக்', 100 மீ., 'பேக்ஸ்டிரோக்') கைப்பற்றினார்.
21-Oct-2025