மேலும் செய்திகள்
உலக விளையாட்டு செய்திகள்
19-Oct-2025
டோக்கியோ: பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் சுவிட்சர்லாந்தின் பென்சிக் சாம்பியன் பட்டம் வென்றார்.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக், செக்குடியரசின் லிண்டா நோஸ்கோவா மோதினர்.ஒரு மணி நேரம், 22 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய பென்சிக் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றார். இது, டபிள்யு.டி.ஏ., ஒற்றையரில் பென்சிக் கைப்பற்றிய 10வது பட்டம் ஆனது. டோக்கியோ ஒலிம்பிக்கில் அசத்திய பென்சிக், இரண்டு பதக்கம் (தங்கம்-ஒற்றையர், வெள்ளி-இரட்டையர்) வென்றிருந்தார்.
19-Oct-2025