உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / நான்காவது சுற்றில் சின்னர்: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்

நான்காவது சுற்றில் சின்னர்: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றுக்கு சின்னர், அல்காரஸ், பெகுலா உள்ளிட்டோர் முன்னேறினர்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், செக்குடியரசின் ஜிரி லெஹெக்கா மோதினர். சின்னர் 6-0, 6-1, 6-2 என்ற நேர் செட்களில் வென்று, 4வது சுற்றுக்குள் நுழைந்தார்.மற்றொரு 3வது சுற்றுப் போட்டியில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், போஸ்னியாவின் டாமிர் மோதினர். இதில் அல்காரஸ் 6-1, 6-3, 4-6, 6-4 என வெற்றி பெற்றார். மற்ற 3வது சுற்றுப் போட்டிகளில் அமெரிக்காவின் டாமி பால், பிரான்சிஸ் தியாபோ, பென் ஷெல்டன் வெற்றி பெற்றனர்.பெகுலா வெற்றி: பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, செக்குடியரசின் மார்க்கெடா மோதினர். இதில் பெகுலா 3-6, 6-4, 6-2 என வெற்றி பெற்று 4வது சுற்றுக்குள் நுழைந்தார். ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா 6-3, 6-1 என கஜகஸ்தானின் யுலியா புடின்ட்சேவாவை தோற்கடித்தார். ஆஸ்திரேலியாவின் கசட்கினா 6-1, 7-5 என ஸ்பெயினின் பவுலா படோசாவை வென்றார்.மற்ற 3வது சுற்றுப் போட்டிகளில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா வெற்றி பெற்றனர்.

போபண்ணா ஜோடி வெற்றி

ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, செக்குடியரசின் ஆடம் பாவ்லாசெக் ஜோடி 6-7, 7-6, 6-2 என்ற கணக்கில் பிரான்சின் பேபியன் ரெபோல், சாடியோ டம்பியா ஜோடியை வீழ்த்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை