உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / அரையிறுதியில் ராமநாதன் ஜோடி

அரையிறுதியில் ராமநாதன் ஜோடி

வாங்சு: சாலஞ்சர் டென்னிசின் அரையிறுதிக்கு இந்தியாவின் ராமநாதன் ஜோடி முன்னேறியது.தென் கொரியாவில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், ஆஸ்திரேலியாவின் பிளேக், அமெரிக்காவின் ரீஸ் ஸ்டால்டர் ஜோடியை எதிர்கொண்டது.முதல் செட் 'டை பிரேக்கர்' வரை சென்றது. இதை ராமநாதன் ஜோடி 7-6 என கைப்பற்றியது. இரண்டாவது செட்டும் 'டை பிரேக்கருக்கு' சென்ற போதும், ராமநாதன் ஜோடி 7-6 என அசத்தியது. ஒரு மணி நேரம், 40 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ராமநாதன் ஜோடி 7-6, 7-6 என நேர் செட்டில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் இன்று அமெரிக்காவின் வாசில் கிர்கோவ், நெதர்லாந்தின் பார்ட் ஸ்டீவன்ஸ் ஜோடியை சந்திக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ