உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / சிறந்த வீராங்கனை சபலென்கா * தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக...

சிறந்த வீராங்கனை சபலென்கா * தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக...

நியூயார்க்: டபிள்யு.டி.ஏ., அரங்கில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிறந்த வீராங்கனை ஆனார் சபலென்கா.பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் (டபிள்யு.டி.ஏ.,) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது. உலகின் பல்வேறு மீடியா இணைந்து தேர்வு செய்கின்றன. இதன்படி 2025ன் சிறந்த வீராங்கனையாக பெலாரசின் சபலென்கா 27, தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு 80 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. கடந்த 25 ஆண்டில் செரினா வில்லியம்ஸ் (அமெரிக்கா), ஸ்வியாடெக்கிற்கு (போலந்து) அடுத்து, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இவ்விருது பெற்ற வீராங்கனை ஆனார் சபலென்கா.2025ல் ஆண்டு முழுவதும், உலகத் தரவரிசையில் 'நம்பர்-1' வீராங்கனையாக நீடித்த இவர், 75 போட்டியில் 63 ல் வென்றார் (12 தோல்வி). 4 தொடரில் கோப்பை வென்ற சபலென்கா, 9ல் பைனலுக்கு முன்னேறினார். கிராண்ட்லாம் அரங்கில் யு.எஸ்., ஓபன் பட்டம் கைப்பற்றினார். ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபனில் பைனலுக்குள் நுழைந்தார்.சிறப்பான வளர்ச்சி கண்ட வீராங்கனையாக அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா 24, தேர்வானார். தவிர சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் (மீண்டு வந்த வீராங்கனை), விக்கி மபோகோவும் (சிறந்த புதிய வரவு) விருது பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை