100 சவரன் நகை திருட்டு
அரியலுார்:அரியலுார் மாவட்டம், கச்சிப்பெருமாள் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தா, 57. இவரது கணவர் ராமலிங்கம் நெய்வேலி அனல்மின் திட்டத்தில் போர்மேனாக வேலை பார்த்து ஓய்வு பெற்று, மூன்றாண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களது மூன்று மகள்களுக்கும் திருமணமாகி விட்டதால், இவர் மட்டும் தனியாக வசித்தார்.நேற்று காலை வீட்டை பூட்டி, சாவியை அருகில் வைத்து விட்டு 100 நாள் வேலைக்கு சென்றார். மாலை வீடு திரும்பியபோது, வீட்டில் பீரோவில் இருந்த 1 லட்சம் ரூபாய், 100 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. வசந்தா புகாரின்படி, உடையார்பாளையம் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.