உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பூஜை பொருட்கள் வாங்க மதுராந்தகத்தில் குவிந்த மக்கள்

பூஜை பொருட்கள் வாங்க மதுராந்தகத்தில் குவிந்த மக்கள்

மதுராந்தகம் : பொங்கல் விழா இன்று தமிழகம் முழுதும் கொண்டாடப்படுகிறது.மதுராந்தகம் பஜாருக்கு, சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பூஜை பொருட்கள் வாங்க குவிந்தனர்.மேலும், புதுப்பானை, செங்கரும்பு, மஞ்சள் கொத்து செடி, பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்கள், மாட்டுப் பொங்கலுக்கு தேவையான கயிறு வகைகள், மாடுகளுக்கு கழுத்தில் அணியும் சலங்கை மணிகள் மற்றும் பூஜை பொருட்களை ஆயிரக்கணக்கானோர் வாங்கிச் சென்றனர்.பூஜை பொருட்கள், பூக்களின் விலை சற்று கூடுதலாக இருந்தாலும், உற்சாகமாக வாங்கிச் சென்றனர். பொங்கல் திருநாளை ஒட்டி, நேற்று மதுராந்தகத்தில் சிறப்பு சந்தை நடந்தது.மண்பானைகள் 40 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை விற்பனைக்கு வந்திருந்தன. பூக்களின் வரத்து குறைவாக இருந்ததால், பூக்களின் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. செங்கரும்பு ஒரு ஜோடி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை