உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்ற 2 முதியவர்கள் கைது

கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்ற 2 முதியவர்கள் கைது

அச்சிறுபாக்கம்:செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையில், அச்சிறுபாக்கம் மதுவிலக்கு ஆய்வாளர் பரிபூரணம் மற்றும் மதுவிலக்கு போலீசார், மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.வெளி மாநில மதுபாட்டில் மற்றும் தமிழ்நாடு அரசு மதுபான கடைகளில், மொத்தமாக மதுபாட்டில் வாங்கி வந்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்த நபர்களை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், மதுராந்தகம் அடுத்த அண்டவாக்கம் பகுதியில், கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்ற ஏழுமலை, 61, நெல்வாய் அடுத்த சேவூர் பகுதியைச் சேர்ந்த தேவராஜ், 60, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.அவர்களிடமிருந்து, இருபதுக்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:சித்தாமூர், சூணாம்பேடு, அச்சிறுபாக்கம், மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில், மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி வந்து, கூடுதல் விலைக்கு விற்பதாக, தொடர்ச்சியாக புகார்கள் வந்தன.அதன்படி, அப்பகுதிகளில் சோதனை செய்து, கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்பனை செய்த, பத்துக்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்து, விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ