உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 2 குடிசை வீடுகள் தீ எரிந்து நாசம்

2 குடிசை வீடுகள் தீ எரிந்து நாசம்

செய்யூர்:செய்யூர் அடுத்த வாழப்பட்டு கிராமம் மேட்டுநெமிலி பகுதியை சேர்ந்தவர் துலுக்காணம், 70; குடிசை வீட்டில் வசித்து வந்தார். நேற்று வீட்டைப் பூட்டி விட்டு நுாறு நாள் வேலைக்கு சென்றார். காலை 11: 00 மணிக்கு திடீரென குடிசை தீப்பற்றி எரிந்தது.தீ பரவி வீடு முழுதும் எரிந்து நாசமானது. அருகே இருந்த கஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான குடிசை வீட்டிலும் தீ பரவியது.பொதுமக்கள் செய்யூர் தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் இரண்டு குடிசை வீடுகளும் முழுதும் எரிந்து, வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகின.செய்யூர் போலீசார் தீ விபத்து குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை