உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / உரிய ஆவணமின்றி வைத்திருந்த 3 கிலோ வெள்ளி நகை பறிமுதல்

உரிய ஆவணமின்றி வைத்திருந்த 3 கிலோ வெள்ளி நகை பறிமுதல்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு, தினமும் பல்லாயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். அதனால், ரயில் நிலையத்தில் எப்போதும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது, ரயில் நிலையத்தின் ஆறாவது நடைமேடையில், சந்தேகப்படும் வகையில் ஒருவர் நீண்ட நேரம் அமர்ந்திருந்துள்ளார்.அவரிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவர் கையில் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர்.அதில், 9.41 லட்சம் ரூபாயும், 3 கிலோ மதிப்புள்ள வெள்ளி நகைகளும் இருந்தன. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அந்த நபரை ரயில்வே காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.அதில், அவர் சென்னை சவுக்கார்பேட்டை அண்ணாபிள்ளை தெருவை சேர்ந்த ஸ்ரீபப்புதாஸ், 48, என்பதும், வெள்ளி நகைகள் செய்து, செங்கல்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு அளித்து வந்ததும் தெரிய வந்தது.அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால், சென்னை வருமான வரித்துறை மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரிளிடம், ஸ்ரீபப்புதாஸை ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ