| ADDED : ஜூன் 18, 2024 06:09 AM
திருப்போரூர், : திருப்போரூர் அடுத்த கோவளம் கடற்கரை பகுதியில், நேற்று முன்தினம் 7:30 மணியளவில், 3 வயது ஆண் குழந்தை, உடன் யாரும் இல்லாமல் அழுது கொண்டிருந்தது.அந்த வழியாக சென்ற வர்கள் குழந்தையை மீட்டு, அருகே உள்ள கடைக்காரரிடம், யாராவதுகுழந்தையை தேடி வந்தால்ஒப்டைத்து விடுங்கள்என, குழந்தையைகொடுத்துவிட்டு சென்றனர்.அந்த கடைக்காரர், அங்கு ரோந்து பணியில் இருந்த கேளம்பாக்கம் போலீசாரிடம் குழந்தையைஒப்டைத்தார்.பின், குழந்தையை காவல் நிலையம் அழைத்து வந்தனர்.இதற்கிடையில், குரோம்பேட்டையை சேர்ந்த பிரியா, 30, என்ற பெண், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, தன் குழந்தையை காணவில்லை என, புகார் தெரிவித்துள்ளார்.கட்டுப்பாட்டு அறையில் இருந்து கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது. காவல் நிலையத்தில் உள்ள குழந்தை, பிரியா வின் குழந்தை தான்என்பது உறுதியானது.பிரியாவை காவல் நிலையம் வரவழைத்த போலீசார், அவர் மற்றும் அவரின் கணவர் ஜோதிபாசு ஆகியோரிடம் விசாரித்தனர்.அப்போது, தாங்கள் குப்பை கழிவுகளை சேகரித்து பிழைப்பு நடத்துவதாகவும், இருவரும்மது அருந்தி விட்டுதுாங்கியதால், உடன் படுத்திருந்த குழந்தையைகவனிக்கவில்லை என்றும் கூறினர்.அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்த போலீசார், இருவரையும் எச்சரித்து அனுப்பினர்.