உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதுராந்தகம் பகுதியில் 3 இளம்பெண்கள் மாயம்

மதுராந்தகம் பகுதியில் 3 இளம்பெண்கள் மாயம்

மதுராந்தகம்:மதுராந்தகம் சின்ன காலனி பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி, 25. இவர், கடந்த ஆறு மாதமாக, கூடுவாஞ்சேரி நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார்.கடந்த 12-ல், அதிகாலை 6:00 மணிக்கு வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். பின், மீண்டும் வீட்டுக்கு வராததால், பெற்றோர், உறவினர்கள் மற்றும் உடன் பணிபுரிவோரிடம் விசாரித்துள்ளனர்.பின், நேற்று, மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.அதேபோல், மதுராந்தகம் தேரடி தெருவை சேர்ந்தவர் பவானி, 29. கடந்த மூன்று மாதமாக, செங்கல்பட்டு அருகே உள்ள மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.கடந்த 13ல், வழக்கம்போல, வீட்டிலிருந்து கிளம்பி வேலைக்கு சென்றுள்ளார்.வேலைக்கு சென்ற பெண் மீண்டும் வீட்டுக்கு வராததால், பவானியின் பெற்றோர், மதுராந்தகம் காவல் நிலையத்தில், நேற்று புகார் அளித்தனர்.மதுராந்தகம் காவல் எல்லைக்குட்பட்ட அபிராமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சரண்யா, 27. இவர், கடந்த 9 ஆண்டுகளாக, ஒழையூர் கிராமத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில், கடந்த 9ல், மேல்மருவத்துார் கோவிலுக்கு சென்று வருவதாக, அவரது தாய் செல்வியிடம் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார்.பின், மீண்டும் வீட்டுக்கு வராததால், பெற்றோர் மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்படி, வழக்கு பதிவு செய்த மதுராந்தகம் போலீசார், காணாமல் போன பெண்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை