உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருவிடந்தை கோவிலில் ரூ.32.27 லட்சம் ஏல வருவாய்

திருவிடந்தை கோவிலில் ரூ.32.27 லட்சம் ஏல வருவாய்

மாமல்லபுரம்: ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ், மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில், நித்ய கல்யாண பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது.இக்கோவிலில், ஆண்டுதோறும் பிரசாத விற்பனை, ஆன்மிக பட விற்பனை ஆகிய கடைகள் நடத்தும் உரிமம் வழங்க, ஏலம் நடத்தப்படும்.தற்போதும், ஜூலை 1ம் தேதி முதல், 2025 ஜூன் 30ம் தேதி வரை, அதற்கான டெண்டர், பொது ஏலம், மே 31ம் தேதி நடத்துவதாக, கோவில் நிர்வாகம் அறிவித்தது.பிரசாத கடைக்கு, 5 லட்சம் ரூபாய் மற்றும் பட விற்பனை கடைக்கு, 1 லட்சம் ரூபாய் என, முன்வைப்புத் தொகை நிர்ணயித்தது. ஆனால், ஏலத்தில் யாரும் பங்கேற்காததால், ஜூன் 20ம் தேதி தள்ளி வைக்கப்பட்டது.தற்போது நடந்த ஏலத்தில், இரண்டு பேர் பங்கேற்றனர். பிரசாத விற்பனை கடை உரிமம், 30.35 லட்சம் ரூபாய்க்கும், பட விற்பனை கடை உரிமம், 1.92 லட்சம் ரூபாய்க்கும் ஏலத்தில் அளிக்கப்பட்டதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை