மதுராந்தகம், : மதுராந்தகத்தில் உள்ள ஏரி பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரி 2,500 ஏக்கர் பரப்பளவு உடையது.இந்த ஏரியின் ஐந்து மதகுகள் வழியாக, 4,000 ஏக்கர் விவசாய நிலங்களும், மேல்மட்ட கால்வாய் வழியாக, 30 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, அதன் வாயிலாக 3,000 ஏக்கர் நிலங்கள் என, மொத்தம் 7,000 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. நிதி ஒதுக்கீடு
மதுராந்தகம் ஏரிக்கு, 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் வாயிலாக ஏரியை துார்வாரி ஆழப்படுத்துதல், கொள்ளளவை உயர்த்துதல் மற்றும் ஏரியின் கலங்கல்களை கதவணையுடன் கூடிய உபரிநீர் போக்கி கட்டமைக்கும் பணிகள், இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், ஏரியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளுக்காக, கூடுதலாக 43 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக 160 கோடி ரூபாய் செலவில், மதுராந்தகம் ஏரி சீரமைக்கப்பட்டு வருகிறது. பணிகள் விபரம்
1மதுராந்தகம் ஏரியை துார்வாரி, 18,500 மீட்டர் புதிதாக முகப்பு கரை அமைத்தல் மற்றும் முகப்பு கரை அருகில் உள்ள தாழ்வான பாசன நிலங்களை உயர்த்தி மட்டப்படுத்தும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது.23,950 மீட்டர் நீளமுள்ள ஏரிக்கரையை முழுதுமாக அகலப்படுத்தும் பணி 20 சதவீதம் முடிந்துள்ளது. மேலும், 1, 2, 3, 4 மற்றும் 5 ஆகிய கலங்கல்களை மறுவடிவமைத்து கட்டும் பணி 90 சதவீதம் முடிந்துள்ளது.3 ஏரியின் ஆறாவது நீர் போக்கியை, தானியங்கி ஷட்டர்கள் பொருத்தப்பட்ட நீர் போக்கியாக மீளக் கட்டுதல் பணி 80 சதவீதம் முடிந்துள்ளது.4ஏரியில் பழுதடைந்த பாசன மதகு எண் - 2 புதிதாக கட்டுதல் பணி 90 சதவீதம் மற்றும் மதகு எண் - 1, 3 மற்றும் 4ல் உள்ள பழுதுகளை நீக்கிப் புதுப்பிக்கும் பணி 50 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.5 ஏரியின் முக்கிய நீர்வரத்து கால்வாயான நெல்வாய் மடுவு மற்றும் கிளியாற்றை துார்வாரி, கரையை பலப்படுத்தும் பணி 50 சதவீதம் நிறைவடைந்து உள்ளது.6 மதுராந்தகம் ஏரிக்கரையின் முன்பக்கம் அமைந்துள்ள 1,567 மீட்டர் நீளமுள்ள பழுதான தடுப்புச்சுவரை புதிதாக வடிவமைத்து, மீளக் கட்டுதல் பணி 90 சதவீதம் முடிந்துள்ளது.7 இதுவரை, மொத்தமாக 70 சதவீத பணிகள் முடிந்துள்ளது.இரண்டு ஆண்டுகளாக கட்டுமான பணி நடைபெற்று வந்ததால், பருவ மழை காலத்தில் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை இருந்தது. நடப்பாண்டு பருவமழை காலத்திற்குள் பணிகளை விரைந்து முடித்து, தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.- நீள்முடியோன்,உதவி செயற்பொறியாளர், கிளியாறு வடிநில உபகோட்டம், மதுராந்தகம்.