உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / எலி மருந்து சாப்பிட்ட 9 மாத குழந்தை அட்மிட்

எலி மருந்து சாப்பிட்ட 9 மாத குழந்தை அட்மிட்

செய்யூர், செய்யூர் அடுத்த அம்மனுார் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன், 31. இவருக்கு, ஏம்கிரிஷ் என்ற 9 மாத ஆண் குழந்தை உள்ளது.வீட்டில் எலித் தொல்லை அதிகமாக இருந்ததால், இரண்டு தினங்களுக்கு முன், உணவில் எலி மருந்து கலந்து வைத்துள்ளார். பின், எலிகள் சாப்பிட்டு மீதம் இருந்த உணவை,குப்பைத் தொட்டியில்வீசியுள்ளனர்.நேற்று காலை 8:00 மணிக்கு, வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்த குழந்தை, குப்பைத்தொட்டியில் இருந்த எலி மருந்து கலந்த உணவை எடுத்து சாப்பிட்டுள்ளது.இதை அறிந்த உறவினர்கள், குழந்தையை மீட்டு, செய்யூர் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை