உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பைக்கில் சென்ற வாலிபர் புளிய மரத்தில் மோதி பலி

பைக்கில் சென்ற வாலிபர் புளிய மரத்தில் மோதி பலி

பவுஞ்சூர்: பவுஞ்சூர் அருகே தேவாத்துார், ஜெய்பீம் நகரை சேர்ந்தவர் பிரகாஷ், 25. கடந்த 8ம் தேதி, தனது பல்சர் இருசக்கர வாகனத்தில், கூவத்துாரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார்.வெளிக்காடு கிராமத்தில் அதிவேகமாக சென்றபோது, சாலையின் குறுக்கே வைக்கப்பட்டு இருந்த தடுப்பில் மோதி, சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதினார். இதில், பலத்த காயம் அடைந்த பிரகாஷை, அணைக்கட்டு போலீசார் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த பிரகாஷ், நேற்று காலை 7:50 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை