உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அட்டை நிறுவனத்தில் தீ ரூ.1 கோடி பொருள் நாசம்

அட்டை நிறுவனத்தில் தீ ரூ.1 கோடி பொருள் நாசம்

பம்மல்:பம்மல் அருகே, அட்டை தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், 30; பம்மல், நாகல்கேணி அப்துல் கலாம் தெருவில், அட்டை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, ஊழியர்கள் வழக்கம் போல் நிறுவனத்தை பூட்டி விட்டுச் சென்றனர். நேற்று அதிகாலை, 4:30 மணியளவில், நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.சற்று நேரத்தில், தீ மளமளவென பரவி பேப்பர் அட்டைகள், இயந்திரங்கள் கொழுந்து விட்டு எரிந்தன. இதனால், அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்தது.தாம்பரம், மேடவாக்கம், அசோக் நகர், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து, 8 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், 7 மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.இந்த தீ விபத்தில், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து, சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.இதற்கிடையில், தீ விபத்து ஏற்பட்ட நிறுவனத்தை அமைச்சர் சுப்பிரமணியன், பல்லாவரம் எம்.எல்.ஏ., கருணாநிதி ஆகியோர், நேரில் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி