உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நீர்பெயர் சாலையில் மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டுகோள்

நீர்பெயர் சாலையில் மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டுகோள்

சித்தாமூர்:சித்தாமூர் அருகே பூரியம்பாக்கம் கிராமத்தில் இருந்து, நீர்பெயர் கிராமத்திற்கு செல்லும், 3 கி.மீ., அளவுடைய தார் சாலை உள்ளது. கீழ்வசலை, மேல்வசலை, வேட்டூர் உள்ளிட்ட கிராம மக்களின் பிரதான சாலையாக உள்ளது.தினசரி பள்ளி, கல்லுாரி மற்றும் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்லும் மக்கள் என, ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர்.வெளியூர்களுக்கு செல்லும் மக்கள், மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, 3 கி.மீ., துாரம் உள்ள கிராமத்திற்கு நடந்து செல்கின்றனர்.இந்த சாலையில், பல ஆண்டுகளாக தெரு விளக்கு வசதி அமைக்கப்படவில்லை. சாலைக்கு அருகே மலைப்பகுதி உள்ளது. அதனால், இரவு நேரத்தில் சாலையில் விஷப்பாம்புகள் மற்றும் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், கிராமத்திற்கு செல்லும் சாலையில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை