உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கொருக்கந்தாங்கல் குளத்தை சீரமைக்க வேண்டுகோள்

கொருக்கந்தாங்கல் குளத்தை சீரமைக்க வேண்டுகோள்

மறைமலை நகர்:மறைமலைநகர்நகராட்சி, காட்டாங் கொளத்துார் அடுத்த கொருக்கந் தாங்கல் பகுதியில், கிராம பொது குளம்உள்ளது.இந்த குளம் முறையாகபராமரிக்கப்படாததால் தண்ணீரில் பாசி படிந்து, மிகவும் அசுத்தமாகவும், குளம் முழுதும் ஆகாயத்தாமரை படர்ந்தும் காணப்படுகிறது.பாதுகாப்புக்காக அமைக் கப்பட்டிருந்த இரும்பு வேலி மற்றும் சிமென்ட் கம்பங்களை மர்ம நபர்கள்உடைத்து எடுத்துச்சென்றுள்ளனர்.இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:இந்த குளக்கரை நடைபாதையில் காலை மற்றும்மாலை நேரங்களில், குடியிருப்புவாசிகள் பலர் நடைபயிற்சி மேற்கொண்டுவந்தனர்.நாளடைவில், குளம் பயன்பாடின்றி வீணாகி வருகிறது. இந்த குளம், சுற்றியுள்ள குடியிருப்புகளுக்கு நிலத்தடி நீரின் ஆதாரமாகவும் உள்ளது.எனவே, இந்த குளத்தை மீண்டும் பராமரித்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ