உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் வைக்க பாதுகாப்பு அறை தயார்

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் வைக்க பாதுகாப்பு அறை தயார்

திருப்போரூர்:திருப்போரூர் தாலுகா அலுவலகத்தில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் வைக்க, நேற்றுபாதுகாப்பு அறை தயார் நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டது.தமிழகத்தில் லோக்சபா தேர்தல், ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அனைத்து முன்னேற்பாட்டு பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில் அடங்கிய திருப்போரூரில், அந்த தொகுதிக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்க, நேற்று திருப்போரூர் தாலுகா அலுவலக தரைத்தளத்தில் உள்ள பதிவு அறை, தயார் நிலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.செயல்பாட்டில் இருந்த இந்த பதிவு அறை இரண்டாம் தளத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக, வருவாய்த் துறை வாயிலாக பாதுகாப்பு அறையை, ஜன்னல் பகுதிகளில் உள் மற்றும் வெளி பக்கம் பலகை அடைத்தல், துாய்மைபடுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை