உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லை சிற்ப வளாகத்தில் சருகுகளை துாளாக்கும் இயந்திரம்

மாமல்லை சிற்ப வளாகத்தில் சருகுகளை துாளாக்கும் இயந்திரம்

மாமல்லபுரம்,:தொல்லியல் சிற்ப வளாகங்களில் குவியும் இலைகள், சருகுகளை துாளாக்கி உரம் தயாரிப்பதற்காக, தொல்லியல் துறைக்கு தன்னார்வ நிறுவனம் இயந்திரம் வழங்கியது.மாமல்லபுரத்தில், பல்லவர் கால சிற்பங்கள் உள்ளன. கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், பிற குடைவரை சிற்பங்களின் வளாகங்களில், நீண்டகாலமாக, வேம்பு, சவுக்கு உள்ளிட்ட மரங்கள் உள்ளன.மரங்களிலிருந்து இலைகள், சருகுகள் உதிர்ந்து, தரையில் குவிகின்றன. தொல்லியல் துறையினர், அவற்றை தினமும் அகற்றுகின்றனர்.அத்துறைக்கு, தனியார் நிறுவன சமூக பொறுப்பு திட்டங்களை செயல்படுத்திவரும், 'ஹேன்ட் இன் ஹேன்ட்' நிறுவனம், சிற்ப வளாகங்களில் குவியும் இலை, சருகுகள் ஆகியவற்றை துாளாக்கி, இயற்கை உரம் தயாரிக்க முடிவெடுத்துள்ளது.அதற்காக, சருகுகளை துாளாக்கும் இயந்திரத்தை வழங்கி, கோனேரி மண்டப வளாக பகுதியில் பொருத்தியுள்ளது. சிற்ப வளாகங்களிலிருந்து, அப்பகுதிக்கு சருகுகளை ஏற்றிச் செல்ல, பேட்டரி வாகனமும் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை