| ADDED : ஆக 13, 2024 11:09 PM
செய்யூர்: செய்யூர் பஜார் பகுதியில், வல்மீகநாதர் கோவிலுக்கு சொந்தமான 46 சென்ட் இடத்தில் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது.வாரந்தோறும் வியாழக்கிழமையன்று செயல்படும் இந்த வாரச்சந்தைக்கு, ஆண்டுதோறும் ஹிந்து சமய அறநிலையத்துறை வாயிலாக ஏலம் விடப்பட்டு, தினசரி மற்றும் வாரச்சந்தையில் அமைக்கப்படும் கடை உரிமையாளரிடம் வாடகை வசூல் செய்யப்படுகிறது.நாள் ஒன்றுக்கு, காய்கறி கடைக்கு 100, மீன் விற்பனை கடைக்கு 50 மற்றும் இதர கடைகளுக்கு 30 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. 2023 - 24ம் ஆண்டிற்கான ஏலம், நேற்று திரவுபதி அம்மன் கோவிலில், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் துவங்கியது.சந்தை நடக்கும் பகுதியில் கூரை வசதி, மின்விளக்கு, குடிநீர், கழிப்பறை வசதி இல்லாததால், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி விட்டு, பின் ஏலம் விட வேண்டும் என, வியாபாரிகள் ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்தனர்.அதனால், வாரச்சந்தை ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. வரும் 30ம் தேதி, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வாரச்சந்தை நடக்கும் இடத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய உள்ளனர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.