உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விமானப்படை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க அழைப்பு

விமானப்படை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க அழைப்பு

செங்கல்பட்டு:இந்திய ராணுவத்தால், அக்னிவீர் வாயு எனப்படும், இந்திய விமானப்படை தேர்வுக்கு, ஜூலை 8 முதல் 28ம் தேதி வரை, https://agnipathvayu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.இத்தேர்வு, இணைய வாயிலாக, 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ல் நடைபெற உள்ளது.இத்தேர்வுக்கு, 17 வயது முதல் 20 வயது வரையுள்ள, பிளஸ் 2 அல்லது 3 ஆண்டு பட்டயப்படிப்பு அல்லது தொழில் படிப்பு முடித்திருக்க வேண்டும்.12ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் பாடப் பிரிவுகளுடன் குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.தகுதியும், விருப்பமும் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ