| ADDED : மே 10, 2024 09:10 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம், நாளை நடக்கிறது.இதுகுறித்து, 108 ஆம்புலன்ஸ் திட்ட மாவட்ட மேலாளர் ராஜசேகர் அறிக்கை:செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம், நாளை காலை 10:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை நடக்கிறது.மருத்துவ உதவியாளருக்கு விண்ணப்பிப்போர், பிளஸ் 2க்கு பின் பி.எஸ்.சி., நர்சிங் அல்லது டி.எம்.எல்.டி., இரண்டு ஆண்டு படித்திருக்க வேண்டும். அறிவியல் சார்ந்த இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும். 19 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.ஓட்டுனருக்கான அடிப்படை தகுதி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு, 24 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். உயரம் 162.5 செ.மீ., குறையாமல் இருக்க வேண்டும்.வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று, மூன்று ஆண்டுகள் குறையாமல் இருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 044- 2888 8060; 2888 8077/-75 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.