உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வெங்கடாபுரம் ஊராட்சி அலுவலக பூட்டை உடைத்து திருட முயற்சி

வெங்கடாபுரம் ஊராட்சி அலுவலக பூட்டை உடைத்து திருட முயற்சி

மறைமலை நகர்,சிங்கபெருமாள் கோவில் அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தில், ஊராட்சி அலுவலகம் உள்ளது.நேற்று முன்தினம்இரவு, ஊராட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், நுழைவு பகுதியில் இருந்த இரண்டு சிசிடிவி கேமராக்களை உடைத்தனர்.அறையின் உள்ளே இருந்த இரண்டு பீரோவின் பூட்டை உடைத்து பார்த்தபோது, உள்ளே பணம் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர்.தொடர்ந்து, ஊராட்சி அலுவலகத்தின் பின்புறம் உள்ள நான்கு வீடுகளின் பூட்டை உடைக்க முயன்று, முடியாததால் தப்பிச்சென்றனர்.நேற்று காலை, ஊராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் பிடிக்க வந்த கிராம மக்கள், ஊராட்சி தலைவர்மற்றும் பாலுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த பாலுார் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.இது குறித்து, ஊராட்சி நிர்வாகம் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை