உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தொல்லியல் துறை அனுமதி பெறாமல் கட்டப்படும் மேல்நிலை குடிநீர் தொட்டி

தொல்லியல் துறை அனுமதி பெறாமல் கட்டப்படும் மேல்நிலை குடிநீர் தொட்டி

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், நீண்டகாலத்திற்கு முன் அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கிழக்கு ராஜ வீதியில், வருவாய்ஆய்வாளர் அலுவலகம் அருகில் உள்ளது.பேரூராட்சி நிர்வாகம், அதிலிருந்து குடிநீர் வினியோகித்தது.நாளடைவில், தொட்டி பலமிழந்ததால் கைவிடப்பட்டது.இந்நிலையில், கூடுதல் குடிநீர் வழங்க கருதி, பழைய தொட்டியை இடித்துவிட்டு, 60,000 லிட்டர் கொள்ளளவில், புதிதாக மேல்நிலைகுடிநீர் தொட்டி அமைக்க, பேரூராட்சிநிர்வாகம் முடிவெடுத்தது.அதற்காக, லோக்சபா தொகுதி மேம்பாட்டுநிதி கோரி வலியுறுத்தப்பட்டு, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், 23.50 லட்சம் ரூபாய் வழங்கினார்.கட்டுமானப் பணிகளை துவக்க, கடந்த மார்ச் மாதம் பூமி பூஜை நடத்தப்பட்டது.அங்கு புதிய தொட்டி கட்ட, பணி ஒப்பந்ததாரர் சார்பில், பழைய தொட்டி தற்போது இடிக்கப்பட்டு வருகிறது.அதே இடத்தில்,வருவாய் ஆய்வாளர் அலுவலகமும் பாழடைந்து உள்ளது.அதற்கும் புதியஅலுவலகம் கட்ட,21 லட்சம் ரூபாய்ஓராண்டிற்கு முன்ஒதுக்கப்பட்டது.அங்கு தொல்லியல் துறையின் பழங்காலசப்த கன்னியர் கோவில் வளாகம் உள்ளநிலையில், வருவாய்அலுவலகம் கட்ட, தொல்லியல் துறைஅனுமதி வழங்கவில்லை.ஆனால், மேல்நிலை குடிநீர்த் தேக்கத்தொட்டி கட்டும் பணிகளை, தொல்லியல்துறையிடம் அனுமதி பெறாமலேயே பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ