உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அணுமின் கழக பணிகள் விண்ணப்பம் வரவேற்பு

அணுமின் கழக பணிகள் விண்ணப்பம் வரவேற்பு

மாமல்லபுரம்:இந்திய அணுமின் கழகத்தின் மனிதவள இயக்குனரகம் சார்பில், 58 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அணுசக்தி துறையின்கீழ் இந்திய அணுமின் கழகம் இயங்குகிறது. அதன் மனிதவள இயக்குனரக பிரிவில், ஹெச்.ஆர்., அசிஸ்டென்ட் - கிரேடு 1ல் 29 பணியிடங்கள் காலியாக உள்ளன.அதேபோல், எப் அன்ட் ஏ., அசிஸ்டென்ட் - கிரேடு 1ல் 17 பணியிடங்களும், சி அன்ட் எம்.எம்., அசிஸ்டென்ட் - கிரேடு 1ல் 12 பணியிடங்களும் காலியாக உள்ளன.இப்பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ள இந்திய அணுமின் கழகம், பாலின சமத்துவம் கருதி, பெண்கள் ஆர்வத்துடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ளது.கல்வித்தகுதி, வயது, விண்ணப்ப பதிவு உள்ளிட்ட விபரங்களை, www.npcil.nic.inஎன்ற இணையதளத்தில் அறியலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை